Skip to main content

குருவாயூர்

குரு பகவானும், வாயுபகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் குருவாயூர். குரு பகவான் சிவனின் அவதாரம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.

வாயு பகவான் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் மாறுவார். கண்ணன் தென்றலாக இருப்பான் தன் பக்தர்களுக்கு. புயலாக மாறுவான் கவுரவர்களை போன்ற துஷ்டர்களை தண்டிப்பதற்கு.

குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் எனப்படுகிறார். இவர் கல்லிலோ வேறு உலோகத்திலோ வடிக்கப்படவில்லை. பாதாள அஞ்சனம் என்னும் மையால்செய்யப்பட்டது இச்சிலை. இந்த சிலையை கிருஷ்ணனே செய்ததாகவும் கூறுவதுண்டு. தன்னைத் தானே சிலையாக வடித்து குருவாயூர் தலத்தில் வந்து அமர்ந்ததாக கூறுவதுண்டு. இந்த சிலையை தனது பக்தரான உத்தவரிடம் கண்ணன் கொடுத்தார். உத்தவர் துவாரகையில் வசித்தவர். துவாரகையை கடல் கொள்ளும் என்றும், அந்த சமயத்தில் இந்த சிலை கடலில் மிதக்கும் என்றும், அதை பிரகஸ்பதியான குருபகவானிடம் ஒப்படைத்து அவர் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்ய சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்.

கண்ணன் சொன்னது போலவே நடந்தது. வாயு பகவான் கண்ணனின் கட்டளையை ஏற்று புயலாய் மாறினார். மழை கொட்டியது. கடல் துவாரகைக்குள் புகுந்தது. உத்தவரிடம் இருந்த சிலை கடலில் மிதந்தது. குரு பகவான் அதை எடுத்துச் சென்று பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார்.

குருவும், வாயுவும் இவ்விதம் கண்ணனின் சிலையை பிரதிஷ்டை செய்தனர். எனவே கண்ணன் தான் குடியிருந்த அந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல் குருவுக்கும் வாயுவுக்கும் மதிப்பளிக்கும் வகையில் "குருவாயூர்'  (குரு + வாயு + ஊர்) என பெயர் சூட்டினார்.

சித்திரை விஷு, கார்த்திகை ஏகாதசி ( இங்கு யானை தான் சன்னதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானையே சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானைதான் சுவாமியை சுமக்கும் பாக்கியத்தை பெறும். இப்படி பல்வேறு வித்தியாசமான நடைமுறைகள் இந்தக் கோயிலில் உண்டு.

இங்கு காலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு விடும். முதல் நாள் அணிந்த மாலை மற்றும் அலங்காரங்களுடன் பூஜை நடத்தப்படும். இதை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் அபிஷேகம் நடக்கும் . தொடர்ந்து 12 கால பூஜைகள் நடத்தப்படும். இந்தக் கோயிலுக்கு சித்திரை முதல் நாள் சென்று வருவது மிகுந்த சிறப்புக்குரியது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு "கை நீட்டம்' வழங்கப்படும். அதாவது ஆளுக்கு ஒரு  ரூபாய் வீதம் மேல்சாந்தி வழங்குவார். கேரள அரசியல்வாதிகளுக்கு கை நிறைய காசு கொடுப்பது இப்போதும் வழக்கம். குருவாயூரப்பனின் அருளால் ஆண்டு முழுவதும் செல்வம் வற்றாமல் இருக்கும் என்பதே கை நீட்டத்தின் தத்துவம்.) விசேச திருவிழாக்கள் ஆகும். குருவாயூரில் மூலவர் உன்னி கிருஷ்ணன் ஆகும்.இங்கே குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறான். உருவத்தில் தான் அவன் குழந்தை. ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன் அவன்.

குருவாயூர் கோயிலில் திருமணம் முடித்தவர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வர். இதனால் இங்கு தினமும் திருமணக் காட்சியைக் காண முடியும். குழந்தைகளுக்கு ருசியான சோறு கிடைக்க, தம்பதியினர் தீர்க்க ஆயுளுடன் வாழ, வெண்குஷ்டம் நோய் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.பிரார்த்தனை நிறைவேறியதும் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

குழந்தைக்கு முதன் முதலாக சோறூட்ட வேண்டும். எந்தக் கோயிலில் போய் ஊட்டினால் அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ருசியான சோறு கிடைக்கும்

கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்து உள்ளது.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...