Skip to main content

Posts

Showing posts from July, 2018

முத்துமாலை அம்மன் கோவில், குரங்கனி

சீதாவை இராவணன் கடத்தி செல்லும் போது இராமருக்கு வழிகாட்ட ஒவ்வொரு பொருளாக போட்டு கொண்டு வந்தாள். அந்த இடத்தில் முத்துமாலை விழுந்தது. முத்துமாலை முத்துமாலை அம்மனாக வழிபடுகின்றனர்.  ஏரல் அருகே உள்ள முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில் உள்ள முத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அந்நாளில் திருடர்கள் இடையூறு அதிகமாக இருந்ததால் மக்கள் குரங்கனி செல்ல பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள்சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர். அந்நாளில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை ஈரப்பதம் காய்வதற்கு மணல் மீது கவிழ்த்து வைப்பார்கள். அடுத்த நாள் எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அன்று இரவு கோயில் பூசாரி மாடக்கண் நாடார் அவர்கள் கனவில் அம்மன் வந்து தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அந்த இடத்தை சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள் என்று ...