சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். அதனால் ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.
கோமதி அம்மன் சன்னதி முன் சக்கரம் ஒன்று உள்ளது அதில் உட்கார்ந்து தியானம் செய்தால் நினைத்து நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாள் சன்னதிக்கும், சாமி சன்னதிக்கும் நடுவில் சிவன் பாதி, விஷ்ணு பாதி சேர்ந்து இருப்பது விஷேசம் இங்கு நாகசுனை தீர்த்தம் உள்ளது.ஸ்தல விருட்சம் புன்னை மரம் ஆகும். பஞ்ச தலங்களில் இது பிருதிவிதலம் (மண் தலம்). அருள்மிகு சங்கரநாராயணசுவாமி, அருள்மிகு சங்கரலிங்க சுவாமி, அருள்தரும் கோமதி அம்மன் ஆகிய தெய்வஙகள் அமைந்து உள்ளது.
இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மார்ச் மாதம் 21, 22, 23, ஆகிய நாட்களிலும், செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும் போது, அதன் ஒளி சங்கரலிங்கர் மீது விழுவதை இன்றும் காணலாம். சூரிய பகவான் சங்கரலிங்கரை இந்நாட்களில் வழிபட்டு வருகிறார்
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் அமைந்து உள்ளது.
கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறும். சைவ, வைணவ சமய பேதங்களைக் கடந்து, சமரசத்தை நிலைநாட்டும் ஸ்தலமாக, திகழ்கிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், அம்பாள் தவத்தின் பயனாக, சுவாமி திருக்காட்சி அளிக்கும் வைபவம் ஆடித் தபசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.