Skip to main content

முறப்பநாடு - குரு

நவகயிலாயத்தில் ஐந்தாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் குரு பகவான் அம்சமாக விளங்குகிறார்.
முறம்பு என்ற சொல்லுக்கு பருக்கைக் கற்கள் நிரம்பிய மேட்டு நிலம் என்று பொருள். சூரபத்மனைச் சேர்ந்த அசுரர்களின் அட்டூழியங்களைத் தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறப்பநாடு என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர ஊருக்கு அருகிலுள்ள முறப்பேஸ்வரர் கோயிலின் பெயரே இவ்வூருக்கு வந்தது என்றும் கூறுவார்கள்.
இப்பகுதியில் தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. காசியில் கங்கை இதுபோல் செல்வதால் இந்த நதிக்கு தட்சிண கங்கை என்று பெயர். இதனால் இங்கு நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமம் என்கிறார்கள். ஆற்றின் மேற்குக் கரையில் கோயில் உள்ளது அதற்கு எதிரில் கிழக்கில் ஆற்றுக்குள் ஒரே கல்லில் பத்து உருவங்கள் பொறிக்கப்பட்ட சிலைகள் உள்ள தசாவதாரக் கட்டமும், காசிக் கட்டமும், சவரி தீர்த்தமும் இங்கு உள்ளன. இந்தக் கோயிலைக் கட்டியவர் வல்லாள மகாராஜர்.
மிருகண்ட முனிவர் பாதயாத்திரை செய்த இடம் என்றும். காஞ்சன மாலைக்கு மோட்சம் கிடைத்த இடம் என்றும் தல வரலாறு கூறுகிறது.
 சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மனம் வருந்திய மன்னன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிய அவரும் zஅந்த மன்னன் முன் தோன்றி இந்த ஊர்த் தீர்த்தக்கட்டத்தில் நீராடும்படி பணிக்க மன்னனும் தன் மகளோடு இங்கு வந்து நீராட, மகளின் முகம் மனித முகமானதாம். இதனால் மனமகிழ்ந்த சோழ மன்னன் இந்தக் கோயிலைக் கட்டினார் என்றும் ஒரு கதை உண்டு.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.
மூலவர் : முறப்பேஸ்வரர்,  கைலாசநாதர்
தீர்த்தம் : தாமிரபரணி, தட்சிணகங்கை,. சவரி தீர்த்தம்.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...