பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துக்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துக்கள் அம்பாளாக திருமேனி கொண்டன. முத்துக்களில் இருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப் பட்டாள்.
பாண்டியர்கள் முத்துக்களை மாலையாக தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை முத்தாரம்மன் என்றும் வழங்கினாள்.
இங்கே அம்பாள் தானே தோன்றி உலகத்தை காப்பாற்றி வருகிறாள். மேலும் இங்கே அம்மையும் அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளாள். நாம் அம்பாளுக்கு கீழே உள்ள பீடம் தானாக தோன்றிய சுயம்பு ஆகும். இது உளி கொண்டு செதுக்கப்படாதது.
அம்பாள் கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி குமரி மாவட்டம் மைலாடி என்னும் ஊரில் சென்று சிலை செய்ய சொல் எனகூறினாள். அதே சமயம் அம்பாள் சாமியுடன் மைலாடி ஊரில் சிற்பி சுப்பையா ஆசாரி என்பவர் கனவில் தோன்றி எங்கள் வடிவத்தை உற்றுநோக்கு இந்த வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்து குலசையில் கொடு என்றாள். இக்கல் ஆண் பெண் பாறையில் உள்ளது. இப்பாறையிலுள்ள கல்லிலிருந்து வடித்து திருமேனியை கொடுத்து அனுப்பு என கூறி மறைந்தாள்.இறைவனும் அம்பாளும் தானே தேர்ந்து எடுத்த வடிவம் இது.
வழி :- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து குலசை சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது.