சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது. இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார்.
இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்றது . ஆண்கள் சபரி மலைக்கு இருமுடி கட்டி செல்வதுபோல் இங்கு பெண்கள் இருமுடி கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றார்கள்.இங்கு வருடத்தில் 10 நாட்கள் திருவிழா, எட்டாம் கொடை மற்றும் பரணி கொடை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது சிறப்பு, இருமுடி கட்டி பெண்கள் பரவசமாக வந்து அம்மனை தரிசிக்கிறார்கள் தரையிலிருக்கும் ஸ்ரீ சக்சரம் மேல் புற்று வளர்ந்து கொண்டே இருக்கிறது.

காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது. பச்சரிசி மாவு சர்க்கரை வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் தலைவலி நோய் குணமாகும் அதிசயம் நடக்கிறது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மண்டைக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது.இது நாகர்கோவிலில் இருந்து 23 கி மி தொலைவிலும்,குளச்சலில் இருந்து 7 கி மி தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75 கி மி தொலைவிலும் அமைந்துள்ளது.