சுவாமியே சரணம் ஐயப்பன் சரணம்
பந்தள நாடு என்பதும் ஒன்றாகும். இந்த பந்தள நாட்டை பாண்டிய வம்சத்தில் தோன்றிய ராஜசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். இவன் வீர தீர பராக்கிரமத்தில் மிகவும் வல்லவன். முறையாக நாடாண்ட இவனது ஆட்சியில் மக்கள் எவ்வித குறைபாடுமின்றி வாழ்ந்து வந்தனர். அழகிய ராணியும், அன்பான குடிமக்களும், ஆண்டனுபிக்க பெருஞ்ச் செல்வமும் இருந்த போதிலும் தனக்குப் பின் தன் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என்ற பெருங்குறை அந்த மன்னனுக்கு இருந்தது.பண்டைய திருவிதாங்கூரில்
பந்தள நாட்டு குடிமக்களும், அன்பே வடிவான தன மன்னனுக்கு பிள்ளைச் செல்வம் இல்லையே என்று பெரிதும் வருந்தினர். சிவ பக்தனான மன்னன் இராஜசேகரனும், இராணியும் தங்களுக்கு வாரிசு வேண்டி சிவபெருமானை தினமும் வழிபட்டு வந்தனர். மன்னன் மீது மாறாத அன்பு கொண்ட மக்களும் மன்னனுக்கு வாரிசு வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.
அரம்பன் என்ற அரக்கனுடைய மகன் மஹிஷாசுரன் பிரம்மாவை நோக்கி நீண்ட காலமாக கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை கலைக்கப் பெரிதும் முயன்றும் முடியாமல் போகவே, இறுதியில் பிரம்மா அவன் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார்.இந்த பூமியில் பிறந்த யாரும் என்னை கொள்ளாதிருக்கும் வரம் வேண்டும் எனக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். அவன் தான் பெற்ற வரத்தை மூன்று லோகங்களிலும் தவறாக பயன்படுத்தி பல கொடுமைகள் செய்தான்.
அவனது கொடுமை தாங்கமுடியாத தேவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் தங்களால் முடியாது என்று மூன்றுபேரும் தம்தம் சக்திகளை ஒன்றாக்கி சண்டிகாதேவியை படைத்தது அவனை போரிட்டு அழிக்க கூறினார்.
அரம்பனின் சகோதரன் கரம்பனுடைய புத்திரி மகிஷி தன்னுடைய சகோதரன் அழிவுக்கு காரணமாக இருந்த தேவர்களை பழிவாங்க முடிவெடுத்து அதற்கான சக்தியை பெற பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் செய்தாள். பிரம்மதேவனிடம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் வரவேண்டும் என கேட்டாள். பிரம்மனும் அவ்வாறே வரம் கொடுத்தார்.
துர்வாசர் சாபத்தால் தேவருக்கு நரை ஏற்பட்டதால் பாற்கடலை கடைய முடிவு செய்தனர். அமிர்தம் வந்தவுடன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சமமாக பங்கிடுவதற்காக விஷ்ணு மோகினி வடிவு எடுத்தார். இதைக்கண்ட சிவன் அவள் அழகில் மயங்கினார். இதனால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ஒரு மணிமாலை அணிவித்து பந்தள மன்னன் வரும் கோவிலின் அருகில் விட்டுச் சென்றனர்.குழந்தையின் ஆளுகுரலை கேட்ட மன்னன் அதன் அருகில் சென்றான்.ஒரு முனிவர் இந்த குழந்தை தேவ குழந்தை இவனின் பன்னிரெண்டாம் வயதில் இவன் யார் என்று தெரியும்.
பிள்ளையில்லாத குறையினால் ராணி குழந்தையை வளர்த்தாள். அவனுக்கு மணிகண்டன் என பெயரிட்டார்கள். பின் ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மணிகண்டன் குருவிடம் நன்றாக விதைகளை கற்றான். அவனின் திறமையை பார்த்த குரு இவனிடம் தன்னுடைய மகனுக்கு பார்வையும் பேச்சித்திறனும் கொடுக்க வேண்டும் எனு கேட்டதற்கு பகவான் கொடுத்தார்.
திவானின் திட்டப்படி ராணி தனக்கு தலைவலி இருப்பதாக் கூறினாள். திவானின் திட்டப்படி வைத்தியரும் புலிப்பால் மட்டுமே குணமாக்கும் என கூறினான். புலிப்பால் கொண்டுவருபவருக்கு தன நாட்டில் பத்தியை தருவதா பறைச்சாற்றினான். எவரும் வராததினால் மணிகண்டன் காட்டுக்கு சென்று மகிஷியை கொன்று தேவர்களை காத்தருளினார்.
தேவர்கள் புலியாக மாறி மணிகண்டனுடன் வருவதை பார்த்து மக்கள் பயந்தனர். மணிகண்டன் புலிப்பால் கொண்டு வந்துள்ளேன் கறந்து கொடுங்கள் என்று கூறினார்.மன்னன் பன்னிரண்டு வயது இன்றுடன் முடிகிற்து. மன்னன் தன்னை மன்னிக்கும் படி கூறினார். மணிகண்டன் தான் வந்தவேலை முடிந்தது.இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்று ஒரு அம்பை எய்தார் அது விழும் இடத்தில் தனக்கு பதினெட்டு படிகள் கொண்ட ஒரு கோவில் கட்ட சொல்கிறார். பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மாவுக்கு கோவில் கட்ட சொல்கிறார்.
மணிகண்டன் கட்டளைப் படி கோவில் கட்டுகிறார். ஆண்டுதோறும் லட்சோப மக்கள் 41 நாள் மாலை அணிவித்து விரதம் இருந்து பூஜைக்குரிய நெய் தேங்காய், பொருட்கள் வாங்கி ஐய்யப்பனின் சரணங்களை விழித்து செல்கின்றாகள்.சங்கராந்தி அன்று ஐய்யப்பனின் ஜோதி வடிவில் காட்சிதருகிறார்.
படங்கள் : கூகிள் நன்றி.
