Skip to main content

சிதம்பரம்

ஆகாயம்
சிதம்பரம்
சிதம்பரம் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர். இதனை ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும்(இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்), வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கிறார். 
ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடைய இவ்வாலயத்தில் உள்ள கிழக்குகோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும்.
மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது. 
சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதால் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளது. 
பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம்அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது. 
இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர். 

இங்கு, நடராசர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை.
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடரானராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர்.
பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது.
சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...