ஆகாயம் சிதம்பரம் சிதம்பரம் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர். இதனை ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும்(இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்), வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கிறார். ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர். நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு...