Skip to main content

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர்.



ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார்.
நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது.
மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். 

முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில்  தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம். 

பிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார்.
மாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.

இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சிவபெருமானை வழிபட முருகனே அமைத்தார் என காச்சியப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலை காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள், ஆறுமுகம்
சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள், ஆகிய ஐந்து பேர் இத்திருக் கோவிலை கட்டினார்கள்.
காசி சுவாமிகள் இத்திருக் கோவிலை கட்டும் போது தன்னுடைய வேலையாட்களுக்கு பன்னீரிலை விபூதி கொடுப்பது வழக்கம். அவர்கள் தூண்டு கை விநாயகர் கோவிலுக்கு அருகே சென்று பன்னீரிலையை பிரித்தால் அவர்கள் தாங்கள் எவ்வளவு வேலை செய்தார்களோ அதற்கான பணம் பன்னீரிலையில் இருக்கும். அவர்கள் வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டோ அல்லது நேரத்தை வீணாகக் கழித்து கொண்டோ இருந்தால் பன்னீரிலை விபூதியில் விபூதி மட்டுமே இருக்கும்.
காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள், இவரது சிலை ஶ்ரீதட்சணா மூர்த்தி சன்னதிக்கு எதிராக உள்ளது. 

சுப்பிரமணிய சுவாமி (மூலவர்)
சுவாமி கடற்கரை ஆண்டியாக காட்சி தருவதால் இருபுறமும் வள்ளி தெய்வானை சிலைகள் இல்லை. வலத்திருவடியில் வெள்ளி சீபலியும் இடத்திருவடியில் தங்க சீபலியுடனும் காட்சியளிக்கிறார்.

பஞ்ச லிங்கம்
முருகப் பெருமான் சூரபத்மனுடன் போர் செய்த போது பல வீரர்கள் இறந்தார்கள். இதனால் இவருக்கு  பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.     (நீர் - திருவானைக்கா, நிலம் - காஞ்சிபுரம், நெருப்பு - திருவண்ணாமலை, வாயு - திருக்காளத்தி, ஆகாயம் - சிதம்பரம் )  பஞ்ச பூதங்களாக ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இறைவன் பூஜை செய்ததால் மனிதர்கள் பூஜைகள் செய்வது கிடையாது. அவ்வாறு செய்வது பாபமாகும். 

ஆறுமுகப் பெருமான்
திருச்செந்தூரின் சிறப்பு மூர்த்தியாக ஆறுமுகம் வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார். வடமொழியில் இவரை ஷண்முகர் என்று கூறுவது உண்டு.

இராஜகோபுரம்
தரை மட்டத்திலிருந்து 137அடி உயரம் உடையது. ஒன்பது நிலைகளிலும் புராண வரலாற்று சிலைகள் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் கதவுகள் மூடியே இருக்கும். இம்மண்டபத்தின் நடுவே அழகிய வேலைப்பாடு அமைந்த நான்கு தூண்களைக் கொண்ட மணமேடை இருக்கிறது. ஐப்பசி மாதம் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். அந்த காலங்களில் மட்டுமே கோபுர கதவு திறக்கப்படும்.

சண்முகவிலாஸ் மண்டபம்
இது கோவிலின் நுழைவாயிலில் உள்ளது. இந்த மண்டபத்தின் நடுவில் இருக்கின்ற மண்டத்தை சுற்றி தூண்கள் இல்லாத அமைப்பு சிறப்பு வாய்ந்த பொறியியல் தொழில் நுட்பம் ஆகும்.

நாழிக்கிணறு
முருகப் பெருமான் தன் படை வீரர்களின் தாகத்தை தணிக்க தன்னுடைய வேலால் தரையில் குத்தி தாகம் தீர்த்ததால் புஷ்கரணி தீர்த்தம் உண்டானது. இது நாழி அளவு உள்ள கிணறாதலால் நாழிக்கிணறு என வழங்லாயிற்று.
மேலும் வதனாரம்ப தீர்த்தம், வள்ளி தீர்த்தம் முதலிய இருபத்துநான்கு தீர்த்தம் சமுத்திரத்தில் உள்ளன. நாழிக்கிணறில் குளித்த பின்னர் கடலில் குளிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

வள்ளி அம்மன் குகை
வடக்கு கிரிவீதியிலிருந்து 15 மீட்டர் தொலைவில் மணறபாறையில் வள்ளி குகை அமைந்து உள்ளது.  குகைக்குள் நுழையும் வாயில் நான்கு அடி உயரமே உள்ளது. ஆகையால் குனிந்து மூன்று படிகள் ஏறி, இடப்புறம் திரும்பி மூன்று படிகள் இறங்கினால் வள்ளி அம்மனை தரிசிக்கலாம்.

தியான மண்டபம்
வள்ளி அம்மன்குகைக்கு அடுத்து 10.10.1994 ம் வருடம் அழகிய அமைதியான மண்டபம்.

சரவணப் பொய்கை
ஆறு தாமரை மலர் மீது ஆறு (முருகன்) குழந்தைகள் படுத்தும் நடுவே பார்வதி தேவி குழந்தைகளை பாசத்துடன் பார்க்கின்ற காடசி மிகவும் அழகாக இருக்கும்.

மூவர் ஜீவ சமாது
திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய காசி சுவாமிகள், மௌன சுவாமிகள், ஆறுமுகம்
சுவாமிகள், ஆகிய மூவர் ஜீவசமாது  இத்திருக் கோவிலின் அருகே உள்ளது. மேலும்  வள்ளி நாயக சுவாமிகள் சமாது தனியாக கோவில் நுழைவாயில் அருகே உள்ளது.


திருச்செந்தூர் முருகன் கோவிலின் அற்புதம்

9.திருச்செந்தூரில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள்






Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.