Skip to main content

திருப்பரங்குன்றம்

                முதல்படைவீடு
              சுப்பிரமணியர் தாம் தங்குவதற்கு தேர்ந்தெடுத்த ஆறு இடங்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. இந்த ஆலயத்தில் தான் இந்திரனின் மகளான தெய்வயானையை திருமணம் செய்து கொண்டார். பராசர முனிவரின் ஆறு மகன்களும் சாபத்தின் விளைவாக சரவண பொய்கையில் மீன்களாக பிறந்தனர். அவர்களுடைய சாப விமோசனத்திற்காக சூரபத்மனை அழித்த பின் இங்கு வருவார். அவரை வேண்டிக் கொண்டால் தான் சாபம் தீரும் என காத்து கிடந்தார்கள்.

                               திருசெந்தூரில் சுர சம்ஹாரத்தை முடித்து பல இன்னல்களை அனுபவித்த தேவர்களை விடுவித்து விட்டு அவர்களுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் வந்தார். பராசர முனிவரின் ஆறு மகன்களும் சுப்பிரமணியரை வணங்கினார்கள் சாப விமோசனம் பெற்றார்கள். அவர்கள் சுப்பிரமணியர் தங்குவதற்கு விஸ்வகர்மாவை அழைத்து மண்டபம் கட்ட சொன்னார்கள்.பின்னர் சூரபத்மனிடம் போரிட்டு வெற்றி பெற்ற சுப்பிரமணியருக்கு இந்திரனின் மகளான தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க பிரம்மா, விஷ்ணுவிடம் சொன்னார். அவர் சுப்பிரமணியரிடம் சொன்னார்கள் அவரும் தன் தாய் தந்தையிடம் கேட்டு முறைப்படி திருமணம்  சொன்னார்.

                                  இந்திராணி தெய்வயானையிடம் தூது அனுப்பினாள். அவளும் சம்மதம் தெரிவித்த பின்னர் சிவ சக்தி முன்னிலையில் திருமணம் நடந்த இடம் இதுவாகும். சுப்பிரமணியர் கண்டவீரப்பு என்ற இடத்தில் தங்கி இருந்த போது மஹா விஷ்ணுவின் இரண்டு மகளான அமிர்தவல்லியும், சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணியருடன் திருமணம் நடக்க வேண்டும் என்று சரவணப் பொய்கையில் தவம் செய்தனர். அந்த தவத்தை மெச்சிய சுப்பிரமணியர் அமிர்தவல்லியை நீ இந்திரனின் மகளாக பிறந்த போது தக்க சமயத்தில் உன்னை மணப்பேன் என்றார்.

                        அது போல இளையவளான சுந்தரவல்லியை நீ சிவ முனி என்ற முனிவருக்கு மகளாக பிறந்து நம்பி என்ற வேடனால் வளர்க்கப் பட்டு சுப்பிரமணியரை திருமணம் செய்து கொண்டார். அமிர்தவல்லி ஆறு வயது பெண் உருவெடுத்து இந்திரனிடம் நான் மகாவிஷ்ணுவின் மகளாவேன் நீ என்னை வளர்க்க வேண்டும் ஏன் சொன்னாள்.அவர் ஐராவதம் என்ற யானையிடம் பாதுகாப்பாக வளர்க்க சொன்னான். அது வளர்த்ததால் தெய்வயானை என்ற பெயர் பெற்றாள் அமிர்தவல்லி. பின்னர் சுப்பிரமணியரை திருமணம் செய்தாள்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது.
சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும்போது, தன் தாயாரின் மடிமீது முருகப்பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்கு தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் தைக் கேட்டார்.
அவர்களுடைய ஆலயம் இன்றும் திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்னும் பெயரில் வழங்கி வருகிறது.
எனவே திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன்-பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தேவர்கள் துயர் களைப் போக்கியதால்  முருகப் பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பி முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.


நன்றி : கூகிள் படங்கள்

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...