நவகயிலாயத்தில் எட்டாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் கேது அம்சமாக விளங்குகிறார்.
இத்தலத்தின் அருகே ராஜமாளிகை ஒன்று உள்ளதால் இத்தலம் ராஜபதி என பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. மேலும் மதுரையை ஆண்ட சந்திரகுலபாண்டிய மன்னனால் இத்தலம் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
தென்திருப்பேரை கிராமத்தின் எல்லைக்கு அருகிலுள்ள, மணத்தி என்ற கிராமத்திலுள்ள, குட்டித்தோட்டம் உடைமரக்காட்டில் இடிபாடான கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் தென்திருப்பேரை கைலாச நாதர் கோயிலைப் போன்று உள்ளது மேலும் ராஜபதியில் உள்ள ஒற்றைக்கல் தென்திருப்பேரை கோயில் தேவதான நிலத்தின் எல்லைக்கல் என்பது இவர்களது கருத்து. ஆனாலும், ராஜபதியில் உள்ள எல்லைக்கல்லையே இன்றும் சிவலிங்கமாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை அருகில் மணத்தி என்ற கிராமத்திலிருந்து வடக்கில் 1 கி.மீ தொலைவில் ராஜபதி உள்ளது தாமிரபரணி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த கோயில் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : பொன்னம்மை