Skip to main content

பாபநாசம் - சூரியன்

சிறுவயதில் அண்ணன், தங்கை தனித்தனியே பிரிந்து சென்றனர். விதிவசத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உறவு தெரிந்தது. செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடி கறுப்புப் போர்வையைச் சுற்றிக் கொண்டு முனிவர்களாகப் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.
 ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி இந்த கறுப்புப் போர்வை எந்தத் தலத்தில் வெள்ளைப் போர்வையாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்றார். பாவநாசம் தாமிரபரணி படித்துறையில் அவர்கள் நீராடியதும், கறுப்புப் போர்வை வெண்போர்வையாக மாறியது. அவர்கள் பாவம் நீங்கியது. ஆதலால் இந்த தலத்துக்கு பாவநாசம் என்று பெயர் வந்தது.
இத்தலத்தில் அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தங்கித் தவம் புரிந்த இடம். நவகயிலாயத்தில் முதன்மையாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சூரிய அம்சமாக விளங்குகிறார்.  விராட புருஷன் வழிபாடு செய்ததால் லிங்கத்திற்கு 'வயிராச லிங்கம்' என்று பெயர். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று களாமரங்களாக நின்றதாலும், அதர்வன வேதம் வாயுவாக, சுவாமியை வலம் வந்ததாலும் மூர்த்திக்கு 'முக்களா மூர்த்தி' என்றும், 'பழமறைநாதர்' என்றும் பெயர்.
 மார்கழி மாதத்தில் இத்தலத்தில் கங்கை வந்து நீராடுவதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த லிங்கத்தை யார் தரிசித்தாலும் அவர்களுடைய அனைத்துப் பாவங்களையும் போக்குவதோடு அவர்கள் நினைத்ததையெல்லாம் கொடுத்தருள்வதால் இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பொதிகைமலையிலிருந்து வரும் அகஸ்தியர் அருவி இத்தலத்தின் வழியாக செல்லும் போது தாமிரபரணி என அழைக்கப்படுகிறது.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் முக்கூடல் - சேரன்மகாதேவி வழியாக  பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பாவநாசம் எனவும் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயிலாக இருக்கலாம்.

இத்தலத்தில் அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தங்கித் தவம் புரிந்த இடம். இதை 'யோக பீடம்' என்பார்கள். நவகயிலாயத்தில் முதன்மையாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சூரிய அம்சமாக விளங்குகிறார்.  விராட புருஷன் வழிபாடு செய்ததால் லிங்கத்திற்கு 'வயிராச லிங்கம்' என்று பெயர். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று களாமரங்களாக நின்றதாலும், அதர்வன வேதம் வாயுவாக, சுவாமியை வலம் வந்ததாலும் மூர்த்திக்கு 'முக்களா மூர்த்தி' என்றும், 'பழமறைநாதர்' என்றும் பெயர்.

மார்கழி மாதத்தில் இத்தலத்தில் கங்கை வந்து நீராடுவதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த லிங்கத்தை யார் தரிசித்தாலும் அவர்களுடைய அனைத்துப் பாவங்களையும் போக்குவதோடு அவர்கள் நினைத்ததையெல்லாம் கொடுத்தருள்வதால் இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. பலிபீடம், நந்தி, கொடிமரம் ஆகியவை உள்ளன. உள் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வடக்கு நோக்கியும், எதிர்புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியும் உள்ளனர்.

இத்தலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பொதிகைமலையிலிருந்து வரும் அகஸ்தியர் அருவி இத்தலத்தின் வழியாக செல்லும் போது தாமிரபரணி என அழைக்கப்படுகிறது.

இன்றைய சூழலில் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி மட்டுமே உள்ளது.

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ தொலைவில் முக்கூடல் - சேரன்மகாதேவி வழியாக  பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பாவநாசம் எனவும் அழைக்கப்படுகிறது.

மூலவர் : பாவநாசர், முக்களா மூர்த்தி, பழமறைநாதர்
அம்பிகை : உலகம்பிகை
தலவிருட்சம் : முக்களா மரம்.
 

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...