பல ஆண்டுகளுக்கு முன்பு நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஒரு முனிவர் அற்புதமான மாம்பழம் கொடுத்தார். அது நன்றாக இருந்ததால் அதை தின்று விதையை அவன் ஆற்றின் கரையில் புதைத்தான். அது நன்றாக வளர்த்து வந்தது. அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்க கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான். ஒருநாள், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள் இளம்பெண். அவள் ஆற்றில் மிதந்து வந்த மாமரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான். வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
.
அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல கொண்டாடப்படுகிறது. இங்கு சீட்டு எழுதி வைக்கின்றனர். பில்லி, சூனிய பாதிப்பில் இருந்து காப்பாற்றகிறாள்.
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.