Skip to main content

மேல் மலையனூர் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி

ஆதி சக்தியான பிரம்மாண்ட நாயகி, சத்தியமங்கலம் கொமாரபாளையத்தில் அங்காள பரமேஸ்வரியாக அருள்பாலித்து கருணைத் தாயாக வீற்றிருக்கின்றாள். இதற்காக அவ்விடத்தை அன்னையே தேர்ந்தெடுத்து கோவில் கொண்டு வீற்றிருக்கின்றாள் என்பது மிகவும் அதிசயமான அற்புதமான அருள் வரலாறு ஆகும்.

சுமார் 600 வருடங்களுக்கு முன்னால் நான்கு அன்பர்கள், மைசூரில் அங்காள பரமேஸ்வரியின் ஆழ்ந்த பக்தர்களாக இருந்தனர். கேட்பவர்களுக்கெல்லாம் கேட்கும் வரம் தரும் இந்த அன்னைக்கு நாமே ஓர் ஆலயம் கட்டலாமே என்று அன்னையின் அருளால் தீர்மானித்தனர். அதற்காக மூல சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை அழைத்து வர வேண்டும். அவளின் சக்தி அம்சமாக விளங்கும் புற்றிலிருந்து மண் எடுத்து வந்து, அதோடு மேல் மலையனூரிலேயே சிலையை வடித்துத் கொண்டு வந்து அந்த மூல ஆற்றலோடு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்கள்.

அதற்குக் காரணம் மேல் மலையனூரின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, மூல சக்தி என்பது மட்டுமல்ல, 54 சக்தி பீடங்களில் தாட்சாயிணியின் வலது பாகம் வீழ்ந்த இடத்தில் குடி கொண்டவளே மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி. அதனால் தான் அவள் சக்தியை அவள் அருளோடு கொண்டு வரத் திட்டமிட்டனர்.

அதன்படியே மேல்மலையனூர் சென்று ஓர் அங்காளி சிலையை வடித்து, அதோடு புற்று மண் எடுத்துக் கொண்டு, மைசூர் நோக்கி புறப்பட்டார்கள். அதன் பின்னர் தான் அம்மனின் திருவிளையாடல் ஆரம்பமானது. என்னை அழைத்துச் செல்லத்தான் உங்களால் முடியுமே தவிர, அமரும் இடத்தை நீங்கள் அறிய முடியுமா என சிரித்துக் கொண்டாள்.

அந்த நான்கு மைசூர் அன்பர்களும் அம்பிகையின் திருவுள்ளம் அறியாமலே ஆழ்ந்த பக்தியோடு சிலையையும், புற்று மண்ணையும் சுமந்து கொண்டு மைசூர் நோக்கி சென்றார்கள்.

வழியிலேயே இறை சக்திகள் சூழ்ந்திருக்கும் சத்தியமங்கலம் எனும் ஊரில் கொமாரபாளையம் என்ற இடத்தில் பவானி நதிக்கரையில் சந்தியா வந்தனம் செய்ய எண்ணினர்.

பவானி நதி, அம்மனின் வருகையை அறிந்து ஆனந்தமாக கல கலத்து நகைத்து இன்பப் பெருக்கெடுத்து ஓடினாள்.

அன்னையின் எண்ணம் அறியாத அவர்கள், அம்பிகையின் சிலையை கீழே வைத்து விட்டு, நீராடி தங்கள் கடன்களை முடித்தார்கள்.

பிறகு மீண்டும் பயணம் செய்ய அம்பிகையின் சிலையை எடுத்தார்கள்.அப்போது தான் அம்பிகையின் அற்புத திருவிளையாடல் அங்கு நடந்தது. அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை. நால்வரும் சேர்ந்து எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் சிலை சிறிதும் கூட அசையவில்லை. எத்தனையோ முயற்சித்தும் எடுக்க முடியாமல் போனது,

அப்பொழுது தான் அவர்களுக்குப் புரிந்தது. அம்பிகை தான் அமர்ந்து அருள் பாலிக்க வேண்டிய இடத்தை, அவளே தேர்ந்தெடுத்து, நிச்சயித்துக் கொண்டால் என்பது.

அது யாரும் இல்லாத அநாதரவான இடம். சுற்றிலும் வெட்டவெளி, கொஞ்சம் இடம் தள்ளி வயல வரப்புகள், வானமே கூரை, வையகமே மாளிகை என்று அம்மை நினைத்தாளோ.

அந்த நால்வருக்கும் கண்ணீர் பெருகியது. உள்ளம் கசிந்து உருகியது. அம்மா! இது என்ன வேடிக்கை? நீ படைத்த கோளங்கள், கோலங்களாய் விரிந்திருக்க கோரைப் புற்கள் முளைத்த இடத்திலே கோவில் கொள்ள நினைத்தாயே - எனப் பரவசம் அடைந்தார்கள்.

அம்பிகையின் எண்ணப்படியே, அந்த நான்கு அருள் அன்பர்களும் மனமுருகி அசைக்க முடியாத சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி, அந்த இடத்திலேயே ஓர் சிறிய ஆலயம் கட்டினார்கள். இப்படிப்பட்ட திருவிளையாடலோடு அங்கே ஆட்சி புரிய வந்தவள் தான் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி.

தானே அங்கே விரும்பி அமர்ந்ததனால் மிக மிக சாந்த சொரூபிணியாக காட்சி தருகிறார்கள். அருளாட்சி புரிகின்றாள். இவள் மூன்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குலதெய்வங்களாகக் கோலோச்சி விளங்குகிறாள். சிம்ம வாகனத்தை விட்டு நந்தியை வாகனமாகக் கொண்டு வந்த சாந்த சொரூபிநியாக இருக்கிறாள்.

அம்பிகையின் அருட்கதைகள் எண்ணற்றது. அவளின் அன்பைப் புரிந்து கொண்டவர்கள், அவளால் வரம் பெற்று வளம் நிறைந்தோர்கள், என அவளின் பக்தர்கள் ஒன்று கூடினார்கள், ஒருங்கிணைந்தார்கள். அன்னையை வணங்கி அமுதுண்டார்கள்.

சாந்த சொரூபிணியான, நம் அன்னையின் ஆலயத்தில் இனி ஒரு போதும் உயிர் பலிகள் தரக் கூடாது, என எண்ணம் கொண்டு சாத்வீக பூஜைகளும், ஆராதனைகளும் செய்து அம்பிகையின் அருளைப் பெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு இந்த அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காணும் மிக அற்புதமான ஒன்றாகும்.

அங்காள பரமேஸ்வரியின் தோற்றம்

ஆதியுகத்தில பிரம்மதேவன் 5தலைகளுடன் இருந்தார். ஓரு சமயம் மகாவிக்ஷ்ணுவிடம் காக்கும்தொழிலை விட படைக்கும் தொழில்புரியம் தாமே முழுமுதற் பொருளாவோம் ௭ன பிரம்மாவின் 5வது தலை ஆணவம் பேசியது. அந்த ஆணவத்தை ௮டக்க விக்ஷ்ணு சிவபிரானை கேட்டுக் கொண்டார். சிவபிரான் விண்ணும் மண்ணும் நிறைந்து நடுவுற தோன்றி ௭மது ௮டியும் முடியும் முதலில்காண்பவரே ௨யர்ந்தவர் ௭ன்று ௮சரீரியாக ௨ரைத்தார். திருமால் ௮டிகாண இயலேன் ௭ன்றார். பிரம்மனனின் 5வது தலை தாம் முடியைக் கண்டோம் ௭ன்று ௨ரக்க கூறிச் சிரி்த்தது.

காலபைரவர் தோன்றி ஆணவம், பொய் பேசியதாற்காக பிரம்மாவின் 5வது தலையை கைவிரல்நகங்களால் திருகி கொய்தார். மகாவிக்ஷ்ணுவின் ஆலோசனையின் பேரில் பைரவர் கையி்ல் பிரம்மகபாலத்தை ஓட்டிக்கொண்டார்.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...