பாம்பு மே காடு ( திருச்சூர், கேரளா ) நம்பூதிரி வாசுகி உபதேசித்த பத்து சிகிச்சை, விஷ சிகிச்சை செய்து கொண்டு இருந்தார்.ஒருநாள் தமிழ்நாட்டு ராஜாவுக்கு பத்து நோய் வந்தது.அவர் எங்கு வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. நம்பூதிரி வாசுகி பற்றி தெரிந்து அவரை சிகிச்சை செய்ய அழைத்தார்.
அவரும் சிகிச்சை செய்து விட்டு நாகர்கோவில் வழியாக காட்டு பாதையில் வருகிறார். அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பி பார்க்கிறார். அங்கு அழுது கொண்டிருந்த பெண்ணிடம் காரணம் கேட்கிறார். அந்தப்பெண் தான் காட்டில் புல் அறுத்து கொண்டிருக்கும் போது ஐந்து தலை கொண்ட நாக சிலையில் என் அரிவாள் பட்டு ரத்தம் வழிகிறது. இது சாதாரண சம்பவம் இல்லை என சொல்கிறாள்.
நம்பூதிரி தன் மந்திர சக்தியால் நாகத்தை வேண்டி வந்த ரத்தத்தை நிறுத்துகிறார். இங்கு ஆனந்த மூர்த்தியின் சாந்நித்யம் இருப்பதை உணர்ந்து மெய்சிலிர்கிறார். பின்னர் அங்குள்ள் மக்களை அழைத்து நாகரின் பெருமைகளை சொல்லி தேவஸ்தானம் அமைத்து கோவில் காட்டுகிறார். தொடர்ந்து பூஜா நடைபெறுகிறது.
அதனால் தேடி வரும் மக்களுக்கு நாகரின் அருள்கிடைக்கிறது. இது கேரளாவில் இருந்தது. 1956 நவம்பர் 1 ம் தேதி தமிழ் நாட்டுடன் சேர்க்கப்பட்டது.கொடு நல்லூர் பரணி காலத்தில் அனைவரும் கோவில் உள்ளே செல்லலாம். இங்கு நடை திறந்து மூடுவது இல்லை.ஆயில்யம் நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜா நடைபெறும். பாம்பு மே காடு நம்பூதிரி வம்சத்தின் வயதானவரே இங்கு பூஜா செய்கின்றனர்.
கதலிப் பழம்,பால் பிரதான நெய்வேத்தியம் ஆகும். மற்றும் சர்பப்பலி, முடியேற்று வழிபாடாகும். இங்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி குழந்தை இல்லாதவருக்கு குழந்தை கிடைக்கிறது. அதனால் இங்கு தெய்வ சக்தியால் திரும்ப திரும்ப மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.