Skip to main content

Posts

Showing posts from November, 2017

குன்னத்தூர் - இராகு

இத்தலம் நவகைலாயங்களில் ஒன்றான ராகு தலமாகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்குவதோடு, வேலை வாய்ப்பில் உயர்வு, புதிய வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் பலன் கிட்டும். குழந்தையில்லா பெண்கள் இறைவனை வணங்கி மூன்று முறை கோயிலை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து பால் அபிஷேகம் செய்கிறார்கள். முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக் கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது. இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்கள...

வம்சம் தழைக்க செய்யும் வாகையடி இசக்கியம்மன்

இசக்கி அம்மன் என்ற ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்ற குங்குமங்கள் சாத்துவார்கள் அம்மனை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அம்மனுக்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள். இங்கு திருமணம் நடக்காமல் இருப்பவர்கள் மூன்று கடைசி வெள்ளிக்கிழமை வந்தால் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். இந்தியாவில் தமிழ்நாடு, திருநெல்வேலியிலிருந்து நான்குநேரி செல்லும் வழியில் நெடுங்குளம் என்ற சிற்றூர் உள்ளது.  இங்கு குளற்றுக்கரை அருகே வாகையடி இசக்கி அம்மன் அருள்புரிந்து வருகிறாள். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல கோவில் சிறியதாக இருந்தாலும் குறைகளை தீர்ப்பதில் கைதேர்ந்தவளாக இருக்கிறாள்.  இசக்கி அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியம் பால் கொழுக்கட்டையும் பச்சரிசி சாதமுமே ஆகும்.  அன்போடு பக்தர்கள் தரும் காணிக்கை பொருட்களை கண்டிப்புடன் வசூல் செய்வதில் கில்லாடி இசக்கி அம்மன்.  நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு மறந்...

திருமங்கலக்குடி -- தோஷம் நிவர்த்தி ஸ்தலம்

பித்ரு தோஷம் என்பது நளமகாராஜாவை பற்றிய சனி தோஷத்தைவிட கொடுமையானது; யாரையேனும் கொல்வதால் வரக்கூடிய ப்ரம்ம ஹத்தி தோஷம் என்பதனைவிடக் கொடியது. ராவணேஸ்வரனை கொன்ற கடவ...

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார்.   ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.  கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது மூலவர் : கைலாசநாதர் அம்பிகை : சௌந்தர்யநாயகி நவகைலாயம் 1. பாப...

கோடகநல்லூர் - செவ்வாய்

பரீட்சத்து மன்னரையும், நளனையும் தீண்டிய கார்க்கோடக பாம்புக்கு மகாவிஷ்ணு முக்தியளித்த தலம் இது என்பதால் இந்த 'கார்கோடக ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு கருநாகப் பாம்புகள் அதிகம். கோடைக்காலத்தில் இங்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அது நாளடைவில் மருவி கோடகநல்லூர் என்றாயிற்று. நவகயிலாயத்தில் மூன்றாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் செவ்வாய் அம்சமாக விளங்குகிறார். இது செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.  ஊரின் வடக்கில் உள்ளது இந்த கோயில். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் கோபுரமோ, கொடிமரமோ இல்லை.  ஆதிசங்கரர் இவ்வூரை 'தட்சிண சிருங்கேரி' என்று கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்றை இவ்வூர் மக்கள் 'தட்சிண கங்கை' என்கிறார்கள். திருவாதிரை,  சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டுமே பூசை நடைபெறுகிறது திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் சாலையில் உள்ள நடுக்கல்லூர் ...