Skip to main content

குன்னத்தூர் - இராகு

இத்தலம் நவகைலாயங்களில் ஒன்றான ராகு தலமாகும். லிங்கமாக இருக்கும் இறைவனின் உடலில் நாகம் இருப்பது தமிழகத்தில் இங்கு மட்டும் தான்.
கால சர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்குவதோடு, வேலை வாய்ப்பில் உயர்வு, புதிய வேலை வாய்ப்பு வேண்டுபவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் பலன் கிட்டும்.
குழந்தையில்லா பெண்கள் இறைவனை வணங்கி மூன்று முறை கோயிலை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.
முன் மண்டபத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக் கிறாள். கருவறையில் உள்ள கோதபரமேஸ்வரர் நெஞ்சில் ஒரு சர்ப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது.
இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச்சொன்னான். இதற்குள் குடத்திலிருந்த தண்ணீரை எடுக்கும் போது அதற்குள் பழம் இருப்பதைக்கண்டு, அந்தப்பழத்தை அரசனிடம் கொண்டு போய் கொடுத்தாள்.
இந்த பெண்ணே பழத்தை திருடிக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து நல்லபெயர் எடுக்கிறாள் என நினைத்த அரசன் அவளை கழுவேற்ற உத்தரவிட்டான். அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் பெண்களும், குழந்தைகளும், பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...