நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.
கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர்.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது
மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : சௌந்தர்யநாயகி
நவகைலாயம்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
