Skip to main content

முத்துமாலை அம்மன் கோவில், குரங்கனி

சீதாவை இராவணன் கடத்தி செல்லும் போது இராமருக்கு வழிகாட்ட ஒவ்வொரு பொருளாக போட்டு கொண்டு வந்தாள். அந்த இடத்தில் முத்துமாலை விழுந்தது. முத்துமாலை முத்துமாலை அம்மனாக வழிபடுகின்றனர்.  ஏரல் அருகே உள்ள முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த காலத்தில் குரங்கனியில் உள்ள முத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அந்நாளில் திருடர்கள் இடையூறு அதிகமாக இருந்ததால் மக்கள் குரங்கனி செல்ல பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள்சேர்ந்து குரங்கனி முத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர்.
அந்நாளில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை ஈரப்பதம் காய்வதற்கு மணல் மீது கவிழ்த்து வைப்பார்கள். அடுத்த நாள் எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அன்று இரவு கோயில் பூசாரி மாடக்கண் நாடார் அவர்கள் கனவில் அம்மன் வந்து தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அந்த இடத்தை சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறினாள். இன்றும் கர்ப்பகிரஹத்தில் அம்பாள் அருகே உள்ள தாழிக்கும் பூஜை நடைபெறுகிறது.
சிலநாட்களுக்கு பின்னர் அம்பாளுக்கு சிலை அமைக்க நினைத்தனர். அப்போது கோயில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்பாள் வந்து பக்கத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் ஒரு வயலில் என் சிலை புதைந்துள்ளது. அங்கே வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் தோன்டினால் சிலை கிடைக்கும் என்றாள். அதே போல வயல் சொந்தக்காரர்கனவில் அம்பாள் வந்து வயலை தோன்டி சிலை எடுப்பதை தடுக்க வேண்டாம் என்றாள். அம்மன் கூறியபடி கருடன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தற்போது வழிபட்டு வரும் கருங்கல் சிலை சுயம்புவாக கிடைத்தது. அந்த சிலையை பூஜை செய்து பக்தியுடன் முக்கூடலுக்குகொண்டு வந்து மண்தாழிக்கு அருகில் சிலையை வைத்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
முக்கூடல் இந்துநாடார் மக்கள் இக்கோயிலை 150 ஆண்டுகளுக்கு மேலாகநடத்திவருகிறார்கள்.
முத்துமாலையம்மன்  கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கும். விழாவில் தினமும் காலையில் செம்புகுட்டி சிவில் பவனியும்,மதியம் சிறப்புபூஜையும், அன்னதானமும், மாலை யானைமீது தீர்த்தவாரியும்,இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் பவனியும்  நடைபெறும்.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...